Donate Now

You are currently viewing Donate Now

Donate Now

இங்கு அனைவருக்கும் ஒரு இடம் உண்டு

நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை,

நம்பிக்கை, இறைவனிடம் நம்பிக்கை

இதுவே மகோன்னதத்தின் ரகசியம்  – சுவாமி விவேகானந்தர்

 

இதயத்தை இறைவன் மேல் வைப்போம்
கைகளால் சேவை செய்வோம்

நமது நாட்டு ஏழைகளுக்கு உணவில்லாமல் பட்டினி கிடப்பதைக் காணும் போது , பூஜை முதலியவற்றையும் , கல்வியையும் தூர எறிந்துவிட்டு , சாதனையாலும், புலனடக்கத்தால் வந்த ஆற்றலாலும், பணக்காரர்களின் மனதை திருப்பி, பணம் திரட்டி, ஊர் ஊராகச் சென்று ஏழைகளுக்கு தொண்டுபுரிவதில் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும் என்னும் எண்ணம் எனக்கு உண்டாகிறது   – சுவாமி விவேகானந்தா 

 

இறை இன்பமும்
மற்ற இன்பமும் ஒன்றேதான்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கிராமத்திற்கும் போ.. ஆன்மாவின் பெருமையை சிங்கம் போல் கர்ஜனை செய் “எழுந்திரு ! விழித்துக்கொள் ! இலட்சியத்தை அடையும் வரை நில்லாதே” என்று  முழங்கி எல்லோருடைய மனத்திலும் அச்சமில்லாத நிலையைப் புகுத்து…. “வேலை, வேலை, எல்லையற்ற வேலை, பயன் கருதாத உள்ளமும் ஆவியும் ஆண்டவனுடைய திருத் தாமரைகளில் எப்போதும் பதித்து செய்யும் வேலை” இந்தகருத்தை எல்லோருக்கும் போதிக்க வேண்டும் ,                      – சுவாமி விவேகானந்தர் 

தானம் கொடுப்பதால் யாரும் ஏழையாகியதில்லை

உங்களிடம் போதுமான சிரத்தை இல்லை; உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை, பிறகு உங்களால் என்ன சாதிக்கமுடியும்? உங்களிடம் பண பலமும் இல்லை, ஆன்மீக முன்னேற்றமும் இல்லை. நான் சொன்ன இந்த வழியில் திறமையை காட்டி பணக்காரனாகி வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்து. தற்காலக் கல்வி, உங்கள் நடை, உடை, பாவனைகளை, மாற்றிவிட்டன. ஆனால் செல்வத்தை சம்பாதிப்பதற்கான புதிய வழிகளை, உங்களிடம் அறிவு இல்லாததால் இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை.

அந்த வழி உன் கைகளில் இருக்கிறது, உன் கண்களை நீயே கட்டிக் கொண்டு “நான் குருடாகி விட்டேன், என்னால் பார்க்க முடியவில்லை” என்று கூறுகிறாய், கண்களைக் கட்டியிருக்கும் கட்டுகளைக் கிழித்து எறி, இந்த உலகம் முழுவதும், நண்பகல் சூரியனின் ஒளி மிக்கக் கதிர்களால் நிறைக்கப்பட்டிருப்பதை நீ காண்பாய்.
– சுவாமி விவேகானந்தர்

இன்றே உங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.

தானம் ஒன்றுதான் கலியுகத்தில் செய்யக்கூடியது என்று வியாசர் கூறுகிறார். நம்மால் கொடுக்க முடிந்தவற்றுள் ஆன்மீக தானம்தான் மிக உயர்ந்தது. அதற்கு அடுத்ததாக லௌகீக அறிவு. அதற்கு,அடுத்து ஒருவரது உயிரைக் காப்பாற்றுதல். அதற்கு அடுத்து கடைசியாக, பசித்தவர்களுக்கு உணவைத் தரும் அன்னதானம.நாம் தேவையான அளவு அன்னதானம் செய்துவிட்டோம். வேறு எந்த நாடும் நம்மைப்போல் கொடையாளியாக இருந்ததில்லை. ஒரு பிச்சைகாரன்கூட, தன் வீட்டில் ஒருபிடிசோறு இருக்கும்வரை, அதில் பாதியைத் தானமாகக் கொடுக்கவே செய்வான் இத்தகைய விசித்திரத்தை இந்தியாவில் மட்டும் தான் காண முடியும். இது போதும். . இப்போது மற்ற இரண்டு தானங்களான ஆன்மீகம் மற்றும் லௌகீக அறிவை அளிப்போம். நாம் எல்லோரும் வீரர்களாக, உறுதி வாய்ந்த உள்ளம் படைத்தவர்களாக ,முழுக்கமுழுக்க உண்மை யானவர்களாக இருந்து, சக்கரம் சுழலத் தோள் கொடுப் போமானால் இருபத்தைந்து ஆண்டுகளில் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து போகும். அதன்பிறகு நாம் எதிர்த்துப் போரிட எதுவுமே இருக்காது. சுவாமி விவேகானந்தர் 

Leave a Reply