ஆன்மீக சிகிச்சை
ஆன்மீக சிகிச்சை என்றால் என்ன?
ஆன்மீக சிகிச்சை என்பது இன்று உலகம் முழுதும் மிக பிரபலமடைந்து வரும் ஒரு பழமையான சித்தர்களின் வழிமுறை ஆகும்.
இதை பயன்படுத்தி உடல், மன பிரச்சினைகளில் இருந்து ஒருவரை குணப்படுத்தும் அற்புத கலையிது .
நம்மிடையே உள்ள அனைத்துப் பிரிவினரும் அதில் ஆர்வம் காட்டுவதை நாம் அறிந்ததே. உலக யோகா தினம் கொண்டாடப்படுவதே விரைவான உலகம் தழுவிய ஒரு சாட்சியாகும்.
பொதுவாக மக்கள் ஆன்மீக சிகிச்சைமுறையைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், பலருக்கு, ஆன்மீக சிகிச்சைமுறை என்றால் என்ன,
அதன் அடிப்படை என்ன என்பது ஒரு மர்மமாகவே இருக்கிறது . கூடுதலாக, வழக்கமான ஆன்மீக பயிற்சியும் ஆன்மீக குணப்படுத்துதலின் ஒரு வடிவமாகும்.
நமது ஆன்மிக ஆராய்ச்சியின்படி, ஆன்மீக சுத்தத்தை அதிகரிப்பது மற்றும் ஆன்மீக அசுத்தத்தை குறைப்பது என்பது ஆன்மீக சிகிச்சைமுறையின் அடிப்படைக் கொள்கையாகும்.
ஆன்மிக சிகிச்சை என்பது நம்மிடமோ அல்லது மற்றவர்களிடமோ செய்யப்படலாம். ஆன்மீக சிகிச்சைக்காக ஒருவரைச் சந்திப்பது கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும்,
பெரும்பாலான நேரங்களில் ஆன்மீக சிகிச்சையை நாமே மேற்கொள்வது சிறந்தது என்பதை நமது கிராம பகுதிகளில் இன்றும் வீடு தோறும் காணலாம்.
அனைவருக்கும் நமது பாரம்பரிய ஆன்மீக சிகிச்சை முறை பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டாக்குவதே எமது நோக்கம் ஆகும்.
ஆன்மீக ரீதியில் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ள சில எளிய மற்றும் சுலபமான வழிமுறைகள் உள்ளன,
அவற்றை பற்றிய ஆன்மீக ரகசியங்களை நாம் இதில் பதிவிடப்போகிறோம்.
மேலும் பலர் எம்மிடம் நேரில் வந்து ஆன்மீக சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.
உண்மையாக சொன்னால் , தகுந்த குருவிடம் தீட்சை பெற்று ஆன்மீகப் பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நிலையான நீண்ட கால ஆன்மீக சிகிச்சை முறையாகும்.
நாம் இங்கு, ஆன்மீக சிகிச்சையின் அடிப்படையிலான பல்வேறு கொள்கைகளை விளக்கமாக, தொடர்ந்து பதிவிட இருக்கிறோம்.
நமது பிரச்சனைகளில் பல ஆன்மீக ஈடுபாடு குறைவாக இருக்கும் மூல காரணத்தையே அடிப்படையாக கொண்டுள்ளன,
எனவே அவற்றைக் கடக்க நமக்கு ஆன்மீக தீர்வு தேவைப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கு ஆன்மீக தீர்வுகள் ஆன்மீக சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது.
இந்த உண்மையைக் கருத்தில் கொண்டு, ஆன்மீக சிகிச்சையானது பெரும்பாலான மக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ உதவும்.
நம்மில் அதிகப்படியான மக்கள் நம் உடல் மற்றும் உளவியல் நலனைக் கவனித்துக்கொள்வதை நன்கு அறிந்திருக்கிறோம். இருப்பினும், ஆன்மீக ஈடுபாடு நம்மீது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும்,
நமது ஆன்மீக நல்வாழ்வைக் கவனித்துக்கொள்வது மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கு முக்கியமானது என்பதையும் நம்மில் பெரும்பாலோர் அறிந்திருக்கவில்லை.
ஆன்மீக பரிமாணத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, தகுந்த ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக சிகிச்சையை மேற்கொள்வது, நம்மில் பலர் தொடர்ந்து எதிர்கொள்ளும் விவரிக்க முடியாத பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.
நீங்கள் உங்களிடையே பலரை பார்த்திருப்பீர்கள். அவர்கள் புலம்புவதை கேட்டிருப்பீர்கள்.
எனக்கு என்ன நோயின்னே தெரியல சார் எந்த டாக்டர்கிட்ட போனாலும் சரியாகல
எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்திட்டேன், நிறைய மாத்திரை சாப்பிட்டும் ஒன்னும் கேக்கில
நான் என்ன செய்வது என்று சொல்பவர்கள் பலர் உண்டு.
இந்த பிரச்னைகளுக்கு காரணம் என்ன வென்றால் இன்றைய நவீன மருத்துவம் ஒரு நோயை மருந்தினால் கட்டுப்படுத்த முடியும் ஆனால் குணப்படுத்த முடியாது?
இதுபோல் பிரச்சனை என்பது உங்கள் குடும்பத்தில் அல்லது உங்கள் நண்பர் அல்லது சக ஊழியரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு இதுபோன்ற நிலை உள்ளது என்றால்.
இதற்கான காரணத்தை பார்ப்போமா, ஒருவருக்கு நோய் வருவதற்கான அடிப்படைக் காரணங்களில் அதிகப்படியானது ஆன்மீக இயல்பே ஆகும்.
அதனால்தான் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும்போது ஆன்மீக பரிமாணத்தை கணக்கில் எடுத்துக்கொள்வது முக்கியம்.
ஆன்மீக குணப்படுத்துதல் என்பது ஒரு பழமையான குருகுல பாடமாகும்,
ஆன்மீக சிகிச்சை என்பது மிக பழமையான நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றே என்பதை நாம் முதலில் ஏற்று கொள்ளவேண்டும் என்பது முற்றிலும் உண்மையே.
எனக்கு தெரிந்து சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் மருத்துவமனைகள் அதிகம் இல்லை. மருத்துவர்களும் இல்லை.
உடலுக்கு ஒரு நோய் வந்தால் ஊர் கோவிலில் பொங்கல் வைப்பார்கள்.
பிரார்த்தனை செய்வார்கள் பூஜை கொடுப்பார்கள்.
அடுத்து ஊருக்கு ஒரு பாடம் போடுபவர் இருப்பார் அவரிடம் சென்று ஆன்மீக சிகிச்சை எடுத்துக்கொள்வார்கள்.
இவை அனைத்தும் நமது சித்தர்களின் ஆயகலைகள் 64 நாளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
அதில் 36 வது கலை ஆகர்ஷணம் என்பது அதை பயன்படுத்தி தான். நாம் பலருக்கு ஆன்மீக சிகிச்சை அளிக்கிறோம் மற்றும் சொல்லி தருகிறோம்.
நமது கலையின் தாக்கத்தில் தான் Reiki, Pranic Healing, போன்ற பலவித கலைகளும் நம்மிடையே வளம் வருகிறது.
ஆனால் இன்றைய வேகமான உலகில் விவேகமாக செயல்பட்டு
பழமையும் புதுமையும் இணைந்த விஷயங்களை எளிமைப்படுத்தி
அனைவரும் சுலபமாக ஆன்மீக சிகிச்சை பற்றிய ரகசியங்களை புரிந்துகொண்டு,
அதில் உள்ள நன்மைகள் மற்றும் தீமைககை உணர்ந்து ஆன்மீக சிகிச்சை முறைகளை பயன்படுத்தி
அனைவரும் பயனடைய வேண்டும் என்பதே நமது உயர்ந்த நோக்க கொள்கையாகும்.
எல்லாம் நல்லாதானே சொன்னீங்க
திடீர்னு அது என்ன நன்மை, தீமைன்னு சொல்லிவிட்டிங்களே என்றுதானே கேட்கிறீர்கள்.
இன்றைய கால கட்டத்தில் ஆன்மீக குணப்படுத்தும் கலையை கற்றவர்களில் பலர் ஆன்மீக ரீதியாக நேர்மறையானவர்கள், நேர்மையானவர்கள்.
அவர்களிடம் ஆன்மீக சிகிச்சை பெறுபவர்கள் நன்மையடைகிறார்கள்.
வேறு சிலர் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தால் தனது குணத்தை சீர்படுத்த மறந்து கற்ற கலையை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
எனவே ஆன்மீக சிகிச்சை பெறுபவருக்கு தீங்கு நடைபெறுகிறது.
ஆன்மீக ரீதியில் நேர்மறையான குணப்படுத்துபவர்களைப் பொறுத்தவரை,
அவர்களின் ஆன்மீக நிலையுடன் குணமடையும் திறன் அதிகரிக்கிறது,
ஏனெனில் ஒருவரின் ஆன்மீக நிலை உயரும் போது உலகளாவிய நேர்மறை ஆற்றல்களுக்கான அணுகல் அதிகரிக்கிறது.
மந்திரம், யந்திரம், தந்திரம், இவற்றை பயன்படுத்தி
கற்கள், படிகங்கள், தாயத்துக்கள் போன்ற ஆன்மீக சிகிச்சைக்காகப் பல பொருள்கள் உள்ளன.
இந்த பொருள்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு சக்தி மற்றும் ஆன்மீக குணப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளன,
மேலும் இது போன்ற செய்திகளை வரும் பதிவுகளில் விரிவாக விளக்கப்போகிறோம்.
நீங்கள் தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
குருஜி மல்லூர் சித்தர்